Friday, January 12, 2024

சின்ன சின்ன கிளிகளே

சின்ன சின்ன கிளிகளே  

தங்க முத்து வண்ணமே 

என் சிறகு நீங்களே 

பறக்கத்  துடிக்கிறேன் 

வலிமை கொடுங்களேன் 

மேகம் தொட வாருங்கள் 

விண்மீன் காணலாம் 

நிலவை எட்டி பறப்போம் 

சுட்டெரிக்கும் சூரியன் 

அஞ்ச வேண்டாம் 

சிறகை விரித்து 

பறந்து பறந்து 

மகிழ்ந்து வாழ்வோம்!

Thursday, June 4, 2020

அவன் - சரவன்

அற்பமாய் நான்கேள்வி கேட்டு

உன்னை ரணமாக்கி செய்த போதும்


என் தோளிற்காய்ஏங்குவாய் நீ !


நான் சிரிக்காததால்


    நீ கோபித்துக் கொண்ட


நாட்களில் சாரல் மழை !


நீ மௌனம் 


    சாதித்த நொடிகளில் 


இடியுடன் கூடிய 


    பலத்த மழை 


மனதில் !


திருமணத் திருவிளையாடல்களை 

திக்குத் தெரியாமல் 
அனைத்துக் கொள்ள 
அதில் வீழ்ந்த சுறா நீ

முதல் வருடத்தில் 

நீ எனக்கானவன் 
என நான் செய்த 
போரில் நம்மை 
இழந்தோம் 

எந்த ஒரு நாளையும் 

நீ இல்லாமல் 
யூகிக்க இயலவில்லை 
என் ஆன்மாவாகி இருக்கிறாய் நீ 

உன் குழந்தை சிரிப்பின் அடிமை நான் 


எனக்கான உலகத்தில் ஆண்டவன் 

எனக்களித்த ஆனந்த பரிசு நீ 

என்னை உனதாக பார்க்காமல் 

உன்னையாகவே பார்க்கும் நீ 
கோடியில் ஒருவன் 



----


வாரத்தின் ஐந்து நாட்களை - கழிப்பதே 

நீ ஆனந்தக் கூப்பாடு போடும் 

அந்த வெள்ளிக் கிழமை இரவை சுகிக்கவே

Sunday, January 21, 2018

நான் அறியேன் பராபரமே



அந்தப் கண்களுக்குள் 

எனை எப்படித் தொலைத்தேன் 
      நான் அறியேன் பராபரமே 

என் தேடலுக்கான தீர்வாய் 

என் தேடலின் தேடலாய்
நீ எப்படி அமைந்தாய் 
      நான் அறியேன் பராபரமே 

சில்லிட்டு நீ சீறினாலும் 

சிதறாமல் 
உனக்குள் அடக்கமாய் நான் 
ஏனோ ?
      நான் அறியேன் பராபரமே 

வெறுப்புத் தீயாய் நான் 

எனை ஆட்கொள்ளும் 
நீராவி நீ 
எங்கிருந்து வந்தாய் ?
      நான் அறியேன் பராபரமே 

வாரி இறைக்கும் வள்ளல் அப்பன் நீ 

உன் ஒரு காய் தேடிய ஓசை நான் ! ஏனோ ?
      நான் அறியேன் பராபரமே 

பிரபஞ்சத்தில் நான் ஒழித்து 

வைத்திருந்த ரகசியங்களை 
உனக்காய் அவிழ்த்திருந்தேன் 
எனை அறியாமல் ஏனோ ?
      நான் அறியேன் பராபரமே 

பூலோகத்தின் எத்தனை வழிகளோ 

அத்தனையையும் உன்னோடே 
பிராயணிக்க, எத்தனித்து காத்திருக்கிறேன் 

எதனாலோ ?
     நான் அறியேன் பராபரமே 

காதல் வளர்த்தேன்



ஏங்கி ஏங்கி 
      தாங்கி தாங்கி 
காதல் வளர்த்தேன் 

விழித்து விழித்து 
      பேசி பேசி 
காதல் வளர்த்தேன் 

சிரித்து சிரித்து 
      வலித்து வலித்து 
காதல் வளர்த்தேன் 

ரசிக்க ரசிக்க 
      ரசித்து ரசித்து 
காதல் வளர்த்தேன் 

தேன் தேன் 
      தித்தித்தேன் 

தெளிவில்லா நிலை

தெளிவில்லா நிலை 

எப்பொழுதும் போல் சிறுவயது முதலே ஞாயிற்றுக் கிழமை முடிவடைவதில், ஏதோ ஒரு கருக்கல் கரு மேகமாய் மனதில் சூழ்ந்து ஆட்கொள்கிறது

வெள்ளிக் கிழமை தோய்ந்து தேயும் போது மனதில் பொங்கி எழும் உற்சாகம், என்னை வரப்போகும் இரு நாட்களில் கேள்வி கேட்க எவரும் இல்லை என்ற எனக்கான முதலாளித்துவம் ஓங்கி எழும்.

சின்ன சின்ன இலட்சியங்கள் பெரிய சாகசங்கள் சிறு குறிக்கோள்கள் அத்தனையையும் இந்த இரு நாட்களில் நாம் சாதித்து  விடலாம் என்ற தப்புக் கணக்கை இந்த ஞாயிற்றுக் கிழமை முடியும் போது மட்டுமே உணர முடிகிறது.

இந்த வாழ்க்கையில் நமக்கான தேடலில் பிறருக்கான சந்தோஷத்திற்காக என்னின் காலத்தை பரிசை அளிக்க என் இலட்சியங்கள் சுக்கு நூறாய்....

என்ன தான் தேடுகிறேன் ? இதற்கான விடையை நான் அறிந்து தெளியும் போது நான் பூரணம் அடைவேன் என நம்புகிறேன்.

ஆறு வருட அலுவலக விடை பெறல்

ஆறு வருட அலுவலக விடை பெறல்

ஏதேதோ எண்ணங்களையும் 
திகட்டாத நியாபகங்களையும் 
செதுக்கிய மனிதர்களையும் 
அழியாத நினைவுகளையும் 
பூட்டிய இதயத்துக்குள் 
பத்திரமாய் எடுத்துச் செல்கிறேன் 

கண்ணீர்

கண்ணீர் 

கோழைத்தனம் 
எதிர்பார்ப்பின் பலன் 
தவறுகளின் அன்பளிப்பு 
பலவீனம் 

சின்ன சின்ன கிளிகளே

சின்ன சின்ன கிளிகளே   தங்க முத்து வண்ணமே  என் சிறகு நீங்களே  பறக்கத்  துடிக்கிறேன்  வலிமை கொடுங்களேன்  மேகம் தொட வாருங்கள்  விண்மீன் காணலாம்...